ஏற்றுமதிகளுக்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு உதவ ‘EXPORT BAHRAIN’



ஒரு முன்னணி அரச வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை தெளிவாக இனங்கண்டுள்ளது.

அதற்கமைவாக, சர்வதேச சந்தைகளில் எழுகின்ற வாய்ப்புக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான நிதியியல் சார்ந்த மற்றும் நிதியியல் சாராத உதவிகளை வழங்குவதற்காக ஏற்றுமதித்துறை குறித்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக மையங்களை ஸ்தாபித்து, புதுமையான கோட்பாடொன்றை வங்கி 2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்த முயற்சியின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகத் துறைக்கு ஏற்றுமதிக்கு முன்னரான நிதி வசதிகள், ஏற்றுமதிக்குப் பின்னரான நிதி வசதிகள், ஆலோசனை சேவைகள், விசேட இணைய வங்கிச்சேவைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் ஏற்கனவே ஐந்து ஏற்றுமதி மையங்களை வங்கி ஸ்தாபித்துள்ளது.

ஏற்றுமதிகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற வங்கியின் இலக்கினை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய அணியொன்று பாஹ்ரென் தேசிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திச் சபையின் மூலோபாய முன்னெடுப்பான Export Bahrain சந்தித்திருந்தது.Export Bahrain பிரதம நிறைவேற்று அதிகாரி சாஃபா ஷரீஃப் ஏ. காலிக் மற்றும் Export Bahrain ” சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புக்கள் பிரிவின் ஸைனாப் மட்ரூக் ஆகியோர் அண்மையில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாஹ்ரெனிலுள்ள இலங்கைக்கான தூதுவரான எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. விஜேரத்ன மென்டிஸ் அவர்களின் முயற்சியால் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கையில் தேயிலை, கறுவா, ஆடையணி, அலங்கார மலர்கள், பதனிடப்பட்ட உணவு, வாசனைத் திரவியங்கள், தேங்காயை மூலமாகக் கொண்ட உற்பத்திகள் அடங்கிய ஏற்றுமதித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சியாளர்களான வாடிக்கையாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post