சுயாதீன தமிழ் ஊடகவியலாளரும் ஸ்டார் எப். எம். வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளருமான ஏ எல் ரஸ்மிக் என்று அழைக்கப்படம் ஏ.எல்.நௌபர் நேற்று (23) இனம்தெரியாத நபர்களால் கட்டாரில் அவரது வாகனம் பலத்த தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப் பட்டுள்ளார்.
இலங்கையினைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஏ.எல். ரஸ்மிக் என்று அழைக்கப்படும் ஏ.எல்.நௌபர் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்னமையாக கண்டிப்பதுடன் தாக்குதல்தாரிகளை உடன் கைது செய்து நீதியின் முன் நிறுத்த ஆவண செய்யப்பட வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றோம் என அனைத்துலக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குரியாகி வருவது தொடர்பில் பல தரப்பினராலும் சுட்டிக்கப்பட்டப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் அதிகார வர்க்கத்தினரால் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் இன, மத, பேதமின்றி ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டது மாத்திரமின்றி கொலையும் செய்யப்பட்ட வரலாறுகள் இலங்கையில் இடம்பெற்ற நிலையில் அவற்றுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.!
சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் அவ்விடயங்கள் தொடர்பில் தமக்கு ஆதரவாக உள்ள அரச அதிகாரிகளை இனம் காட்டாது இருப்பதற்காகவும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளில் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் ஒரு தொடர்ச்சியாகவே இலங்கை ஊடகவியலாளர் ஸ்டார் எப். எம். வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல். ரஸ்மிக் என்று அழைக்கப்படும் ஏ.எல்.நௌபர் மீதான தாக்குதலும் அமைந்துள்ளது. ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் இவ் நாசகார செயல்களில் ஈடுபட்டு வரும் குழுவொன்று தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இதன் உண்மைத்தன்மையை வெளியுலகிற்கு கொண்டு வரும் நோக்கோடு அனைத்துலக தமிழ் ஊடகவியாளர்கள் ஒன்றியம் இவ்வறான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது.
அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்வர்களை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை பாரபட்சமின்றி செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது இருப்பதனை கட்டார் அரசு உறுதி செய்து அதனை ஊடகவியலாளர்கள் முன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் அனைத்துலக தமிழ் ஊடகவியலளார் ஒன்றியம் சுட்டிக்கட்டுகின்றது.
நன்றி..
இலங்கை-தமிழோசை
-A.M.Jazeem-
Post a Comment