உலகளவில் எக்ஸ் தள பயன்பாடு முடங்கியுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக எக்ஸ் தளம் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தவித்து வருகின்றனர்.
பல நாடுகளில் எக்ஸ் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. எக்ஸ் செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் அதை பயன்படுத்த முடியவில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். எக்ஸ் பயனர்கள் தங்களது போஸ்ட்கள் தெரியவில்லை என்றும் ஹோம் பக்கத்தில் வெகு நேரமாக ‘ட்ரை அகைன்’ மற்றும் லெட்ஸ் கோ என்று மட்டுமே வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment