லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி..!


லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு விசாம் டவில் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பின் விசேட படையணியான ரட்வான் படையணியின் முக்கிய உறுப்பினரான விசாம் டவில் என்பவரே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்காத அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் தங்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

கிர்பேர்ட் செலிமின் டப்சா பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள மேற்கொண்ட விமானதாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானதாக்குதல் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.எரிந்த கார் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

Previous Post Next Post