கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்த இஸ்ரேல் ஹமாஸ் போர் 100 நாட்களை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலஸ்தீன காஸா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவ படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சுமார் 25,000 பேர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.
போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.
இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது. சில தினங்களுக்கு முன், பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்து சிக்கலை தீர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“.. ஹமாஸ் அழிய வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணய கைதிகள் மீண்டும் ஓப்படைக்க பட வேண்டும். எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும். போர் இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம்.
ஜோர்டான் நதிக்கு (River Jordan) மேற்கே உள்ள நில பகுதி முழுவதிலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பலஸ்தீனத்தையும் சேர்த்தே குறிக்கும்.
இஸ்ரேலின் எதிர்காலம் என்பது தனி பலஸ்தீனத்திற்கு எதிரானதுதான். இந்த உண்மையை அமெரிக்க நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் என கூறி விட்டேன்..”
Post a Comment