‘ஈரான் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – அமெரிக்கா...!



குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஈரானியர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்கா, ஈரானில் நடந்த குண்டுவெடிப்புக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடுமையாக கூறியுள்ளது.

குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஈரானின் முக்கிய எதிரிகள் இருப்பதாக ஈரான் அரசு கூறியுள்ளதற்குப் பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது.

“..குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இஸ்ரேல் சம்பந்தப்பட்டது என்று நாங்கள் நம்பவில்லை. குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பது நகைப்புக்குரியது..” என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

“.. ஈரானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாக ஈரான் நினைத்தால், அது நகைச்சுவைதான். அதேபோல், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை.” என்று வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஜான் கிர்பி ஊடகங்களில் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post