காசாவில் கடும் மோதல்கள் தொடர்கின்றன - ஒரேநாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி...!


காசாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில் 24 படையினரை இழந்துள்ளதாக இஸ்ரேலியஇராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு கட்டிடங்களிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய டாங்கிகளை இலக்குவைத்து பாலஸ்தீன போராளிகள் ஆர்பிஜி தாக்குதலை மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கட்டிடமொன்றை அழிப்பதற்காக கண்ணிவெடிகளை வைத்துவிட்டு இஸ்ரேலிய படையினர் காத்திருந்தனர் அவ்வேளை ஆர்பிஜி விழுந்து வெடித்ததில் கட்டிடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய காசாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post