பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுமார் 40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
துறைமுகங்கள், எண்ணெய், மின்சாரம், நீர், வங்கிகள், இரயில்வே, பல்கலைக்கழகங்கள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
இன்று தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மாத்திரம் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அதன் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment