இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் விளக்கமளிப்பு

 

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் ஏற்பட்ட சிறிய நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடைய தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனி பண்டார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் நில அமைப்புக்கு அமைய, அழிவுகரமான அபாயங்களுடன் கூடிய நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வெல்லவாய, புத்தல போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சில நில அதிர்வுகளை உணர்ந்துள்ளனர் என்பது உண்மைதான். இது துருக்கியில் ஏற்பட்டது போன்ற நிலநடுக்கத்தை ஏற்படுத்துமா? என்ற தேவையற்ற அச்சம் ஏற்படக்கூடும். எங்கள் நிலப்பரப்பு மிகவும் நிலையானது. இருப்பினும், இலங்கை தீவு இந்து -அவுஸ்திரேலிய டெக்டோனிக் தட்டின் மையத்தில் அமைந்துள்ளது. டெக்டோனிக் தட்டில் பிளவுகள் இல்லாததால் எமது நிலப்பரப்பில் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக்குறைவு. "

Post a Comment

Previous Post Next Post