நிலநடுக்கம் குறித்த முன்னறிவிப்பு பற்றிய மற்றுமொரு தகவல்

 


இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேற்கு நேபாளத்திற்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நில அதிர்வு நிலைகள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, இமயமலையில் உள்ள தர்மசாலாவில் இருந்து 56 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 கிமீ ஆழத்தில் இந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலும் உணர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை கொழும்பு பிரதேசமும் உணர்ந்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post