இலங்கையிலேயே அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் பதிவு...!


ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இலங்கையிலுள்ள பெரியவர்களில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், மூன்றில் ஒருவருக்கு உயர் சர்க்கரை அளவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புவியியல் ரீதியாக, அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு பாதிப்புக்கள் இலங்கையின் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. மூன்றில் ஒன்று கொழும்பில் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகளை கொண்டு ஆசியாவிலேயே சர்க்கரை நோயின் அதிக விகிதத்தைக் கொண்ட நாடாக இலங்கை உருவாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post