நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் மூலம் சமூக நலன்களைப் பெறத் தகுதியானவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு அரசாங்கம் தனது அதிகாரிகளை நியமித்து கணக்கெடுப்பு நடத்தி வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஆர்.எம்.ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
“நலன்புரி தகுதியானவர்களைத் தெரிவு செய்தல் – 2022” என பெயரிடப்பட்டுள்ள கணக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பை நடத்துமாறு தனது சங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
Post a Comment