470 விமானங்களை கொள்வனவு செய்யும் எயார் இந்தியா: புதிய உலக சாதனை…!


புதிதாக 470 விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தை எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரு புதிய உலக சாதனையாகும்.

பிரான்ஸின் எயார் பஸ் நிறுவனத்திடமிருந்து 250 நிறுவனங்களை தான் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக எயார் இந்தியா தெரிவித்தது.

டாட்டா குழுமத்துக்குச் சொந்தமான எயார் இந்தியா நிறுவனம், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் இதை அறிவித்தது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் இணையத்தின் ஊடாக இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

அதன்பின், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களை எயார் இந்தியா கொள்வனவு செய்யவுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்தது. அமெரிக்காவின் உற்பத்தி வல்லமைககான ஓர் அடையாளமாக இந்த ஒப்பந்தத்தை ஜனாதிபதி ஜோ பைடன் புகழ்ந்தார்.

வர்த்தக விமான நிறுவனமொன்று 470 விமானங்களை வாங்கவுள்ளமை குறித்து ஒரே தடவையில் அறிவித்தமை புதிய உலக சாதனையாகும்.

இதற்குமுன் அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 460 விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து 2011 ஆம் ஆண்டு அறிவித்தமையே சாதனையாக இருந்தது.

ஏயார் இந்தியா வாங்கவுள்ள விமானங்களின் பெறுமதி குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், இவற்றின் மொத்தப் பெறுமதி 70 பில்லியன் டொலர்களாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post