மைக்ரோசொப்ட் சேவைகள் பல செயலிழப்பு...!


பல மைக்ரோசொப்ட் சேவைகள் செயலிழந்துள்ளதாக பயனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், மைக்ரோசொப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் உள்ளிட்ட பல சேவைகளை பாதித்த வலையமைப்பு சிக்கலை விசாரித்து வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு தளங்கள் செயலிழந்ததாக செயலிழப்பு அறிக்கைகள் தெரிவிப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கையை மைக்ரோசொப்ட் வெளியிடவில்லை.

ஆனால் டவுன்டெக்டரின் செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளத்தின் தரவு இந்தியாவில் 3,900 க்கும் மேற்பட்ட சம்பவங்களும், ஜப்பானில் 900 க்கும் மேற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் செயலிழப்பு தொடர்பாக அறிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

Previous Post Next Post