கொவிட் அலை உச்சத்தை கடந்ததாக சீனா அறிவிப்பு...!


கொவிட் அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும் அந்நாட்டு அரசு, நாள்தோறும் புதிய பாதிப்பு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுகாதாரத் துறை நிபுணர்கள் தரப்பிலோ, நிலவரமும், அந்நாட்டு அரசு அளிக்கும் புள்ளிவிபரமும் வேறுபடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், நாட்டில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஜனவரி முதல் வாரத்தில் உச்சத்தைத் தொட்டதாகவும், அதன்பின் பாதிப்பு குறைந்து வருவதாகவும் தற்போது 70 வீதமாகக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வாரத்தில் கொரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக இருந்ததாகவும், அதன் பின்னர் குறைந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உச்ச நிலையைக் கடந்துவிட்டதாகவும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான சர்வதேச வல்லுநர்களோ, சீனாவின் புள்ளிவிபரங்கள் மிகவும் நம்பமுடியாதவை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post