மெஸி முன்வைத்த கோரிக்கை; சங்கடத்தில் பிரான்ஸ் PSG கழக நிர்வாகிகள்..!

மெஸி முன்வைத்த கோரிக்கை; சங்கடத்தில் பிரான்ஸ் PSG கழக நிர்வாகிகள்! | Messi S Request France Psg Executives In Trouble
பிரான்­ஸி­லுள்ள பரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழ­கத்தில் (பிஎஸ்ஜி) விளை­யாடும் ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி, அக்­க­ழ­கத்தின் ரசி­கர்­க­ளுக்கு உலகக் கிண்­ணத்தை ­காட்­சிப்­ப­டுத்த அனு­மதி கோரி­யுள்ளார்.

எனினும், இக்­கோ­ரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிப்­பதற்கு கழக நிர்­வா­கிகள் தயங்கி வரு­கின்­றனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

கத்தார் 2022 உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி முடி­வ­டைந்த நிலையில் வீரர்கள் தமது கழ­கங்­க­ளுக்கு திரும்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

கழ­கங்­களின் போட்­டி­க­ளுக்குத் திரும்பும் வீரர்கள் தாம் வென்ற பரி­சு­களை, கழ­கத்தின் முதல் போட்­டிக்கு முன்னர் ரசி­கர்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­து­வது சம்­பி­ர­தா­ய­மா­க­வுள்­ளது.

PSG கழ­கத்தில் முதல் போட்­டி

இதன்­படி, PSG கழ­கத்தில் தான் மீண்டும் பங்­கு­பற்­ற­வுள்ள முதல் போட்­டிக்கு முன், உலகக் கிண்­ணத்தை காட்­சிப்­ப­டுத்து லயனல் மெஸி அனு­மதி கோரி­யுள்ளார்.

ஆனால், ஆர்­ஜென்­டீன அணி இம்­முறை இறு­திப்­போட்­டியில் பெனல்டி முறையில் 4:2 கோல் விகி­தத்தில் பிரான்ஸை தோற்­க­டித்தே சம்­பி­ய­னா­கி­யது.



கத்­தா­ரிலும் ஆர்­ஜென்­டீ­னா­விலும் வெற்­றிக்­கொண்­டாட்­டங்களில் பிரான்ஸின் நட்­சத்­திர வீரர் கிலியன் எம்­பாப்­பேயை கேலி செய்யும் வகையில் ஆர்­ஜென்­டீன வீரர்கள், குறிப்­பாக கோல் காப்­பாளர் மார்­டினஸ் நடந்­து­கொண்­டனர்.

பிஎஸ்ஜி கழ­கத்தில் எம்­பாப்வே பல வரு­டங்­க­ளாக விளை­யாடி வரு­கிறார். லயனல் மெஸி, கடந்த வருடம் அக்­க­ழ­கத்தில் இணைந்தார்.

இந்­நி­லையில், ஆர்­ஜென்­டீன வீரர்கள் கேலி செய்த பின்­ன­ணியில், ஆர்­ஜென்­டீ­னாவின் கிண்­ணத்தை தமது கழக ரசி­கர்­க­ளிடம் காட்­சிப்­ப­டுத்­தும்­போது ஏற்­படக் கூடிய பிர­தி­ப­லிப்­புகள் குறித்து பிஎஸ்ஜி கழக நிர்­வா­கிகள் கரி­சனை கொண்­டுள்­ளனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது,

Post a Comment

Previous Post Next Post