புதிய அமைச்சரவை நியமனங்கள் தாமதம்...காரணம் IMF கடன் தாமதம் ..

 



புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்த்த கடனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையும் இந்த நிலைக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் திகதிக்குள் கடன் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரண்டு தடவைகள் ,ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை கட்சியின் செயலாளர் வழங்கியிருந்த போதிலும்அந்த பட்டியல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post