பாடசாலைகள் நாளை மீள திறப்பு: கல்வி அமைச்சு…!


சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (டிச. 12) மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி, நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) அனைத்து அரசாங்க மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post