”எல்லோரும் ஆஸ்கார் விருதைதான் மதிக்கிறார்கள்”- சென்னை திரைப்பட விழாவில் பார்த்திபன்...!



சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற 20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பேசியிருக்கும் நடிகர் பார்த்திபன், ”ஆஸ்கர் விருதை தான் பெரிதாக நினைக்கிறார்கள், குழந்தைகளில் பெரிய குழந்தை சிறிய குழந்தை என பிரிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சத்யம் திரையரங்கில் 20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திரைப்பட விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ள படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு, கவுரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மாணவர்களின் குறும் படத்திற்கான விருதுகளும், அதைத்தொடர்ந்து இரண்டாவதாக தமிழ் திரைப்பட விருதுகளும் வழங்கப்பட்டன.



திரைப்பட கல்லூரி படங்களுக்கு 3 விருதுகளும், திரைப்படங்களுக்கு 9 விருதுகளும் வழங்கப்படுகிறது.

விழாவில் வழங்கப்படும் விருதுகளில், Best student Film Award திரைக்கல்வி விருது 'ஊமை விழி' படத்துக்கு வழங்கப்பட்டது. Director Of The Film Award விருது வழங்கப்பட்டு கூடுதலாக Rs 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது.



திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களில் 9 படங்களுக்கு விருதுகளை பெற்றுள்ளது, அவை,
Best Actress - கார்கி (சாய் பல்லவி)
Best Actor (2) - மாமனிதன் (விஜய் சேதுபதி), கிடா ('பூ' ராமு)
2nd Best Film - கசடதபற (சிம்புதேவன்)
Best Cinematography - இரவின் நிழல் (பார்த்திபன்)
Best Audiography - நட்சத்திரம் நகர்கிறது (Anthony Ruben)
Best Editing - பிகினிங் (BEGINNING)
Special Jury Award - இரவின் நிழல்
Special Mention (Certificate) Award - ஆதார்
சிறந்த திரைப்படம்- கிடா



விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் மேடையில் பேசுகையில், ”நாளையின் சினிமாவான உங்கள் எல்லோருக்கும் வணக்கம். நான் என் குருநாதரின் காலை தொட்டு கும்பிட்டேன், இப்போது இந்த விருதினை தொட்டு கும்பிடுகிறேன். சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு கிடைத்துள்ள இந்த விருது பெற்ற தாய்க்கும், நான் பெற்ற குழந்தைக்கும் சமம். நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டபோது நீ ஹீரோவாக நடிக்கலாம் என்று என்னை ஊக்கப்படுத்தியவர் கே.ஆர் தான்.

மேலும் இது போன்ற விருதுகள் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை, ஆஸ்கர் போன்ற விருதுகளை தான் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக அரசோடு சேர்ந்து நடத்தும் இந்த விருதுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று சிலருக்கு மட்டும் தான் தெரியும்.



ஒருவரிடம் எத்தனை குழந்தை என்று கேட்கும் பொழுது சிறிய குழந்தை எத்தனை பெரிய குழந்தை எத்தனை என்று கேட்க மாட்டோம் அது போன்று தான் எதுவாக இருந்தாலும் அது விருதுதான். ஒவ்வொரு கைத்தட்டலும் எனக்கு கிடைத்த விருதுதான், மற்றவை பற்றி நான் கவலைபடுபவன் கிடையாது. இந்த விருதுகளை நாம் மதிக்க வேண்டும் அப்போதுதான் நாளைய சினிமா சிறப்பாக அமையும்” என்று பேசினார்.

Post a Comment

Previous Post Next Post