நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக
தரவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதத்தில் 59,759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 வீத அதிகரிப்பு என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 628,017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை சராசரியாக 1991 ஆக காணப்பட்டதுடன், ஒக்டோபர் மாதத்தில் 1355 ஆக காணப்பட்டது.
மேலும், 2021 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துடன், 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment