பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் 1 கிலோ வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட வர்த்தக வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் டின் மீன்களுக்கு அறவிடப்படும் 100 ரூபா விசேட வர்த்தக வரி 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment