பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் பிரதீபன்!


 யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.


நேற்று (30) வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக பதவி உயரவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு புதிய மாவட்ட செயலாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் மாவட்ட செயலாளராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார்.

-யாழ். நிருபர்

Post a Comment

Previous Post Next Post