(ஏ.சீ.றியாஸ்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் மிக அண்மையில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எம். முஹம்மட் நெளஷாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபபேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
கழிவுநீர் வெளியேறுகின்றமையினால் பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வு எட்டப்பட்டதுடன், அவசரமாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் விடுதி பணிப்பாளர்ளிடம் உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏச்.ஏ.சத்தார், விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஹாரூன், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ் ஐ எம் கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம் ஏ கே முஹம்மட் ஏ சி எம் சஹில், பொறியியலாளர் பசில், விடுதி பணிப்பாளர் யு.எல். மன்சூர், பொது சுகாதார பரிசோதனைகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Post a Comment