தென்கிழக்குப் பல்கலையில் மனித உரிமைகள் குறுங்கால பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யூவதிகளுக்கான சான்றிதழ்களை உபவேந்தர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால் நடாத்தப்பட்ட மனித உரிமைகள் குறுங்கால பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (19) கலை கலாச்சார கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
மனித வளங்கள் என்ற சொல் முதல் முதலில் 1900 களின் முற்பகுதியில் பயன்படுத்தப்பட்டது பின்னர் 1960களில், நிறுவனத்தின் பணி புரியும் நபர்களை ஒட்டுமொத்தமாக விவரிக்க பயன்படுத்தப்பட்டது.
மனித உரிமைகள் என்பது பணியாளர்கள் நிர்வாகமாகும், அந்த ஊழியர்களின் வணிகத்தின் சொத்துக்களாக வலியுறுத்துகிறது. இந்த சூழலில் ஊழியர்கள் சில நேரங்களில் மனித மூலதனம் என்பது குறிப்பிடத்தக்க மனித மூலதனம் என்பது குறிப்பிடப்படுகிறார்கள். மற்ற வணிகர் சொத்துக்களை போலவே ஊழியர்களை திறம்பட பயன்படுத்துதல், அபாயத்தை குறைத்தல் மற்றும் முதலீட்டாளர்களின் வருவாய் அதிகப்படுத்துதல் ஆகியவை இலக்காகும் என்றும் தெரிவித்தார்.
மனித உரிமை தொழில்நுட்பச் சொல்லான மனித மூலதான மேலாண்மை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மேலும் மனிதவள மேலாண்மையின் முக்கியத்துவம் நடைமுறைகளில் பங்கு நிறுவனத்தின் பணியை அடைவதற்கும் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும் பணியிடத்தில் உள்ள மக்களை நிர்வாகிப்பது ஆகும்.
மனித உரிமைகள் நோக்கங்கள் நான்கு பரந்த வகைகளாக பிரிக்கலாம், சமூக நோக்கம், நிறுவன நோக்கங்கள், செயற்பாட்டு நோக்கங்கள், தனிப்பட்ட நோக்கங்கள் ஆகும்.
பொதுவாக மனித மனம் ஒரு துறையாக உயர்ந்து வருகிறது. ஒரு நல்ல மனித வள துறை ஏற்படுத்தக்கூடிய மூலோபாய வேறுபாட்டை நிறுவனங்கள் பெரிய முறையில் உணர்ந்து அதற்கேற்ப முதலீடு செய்கின்றன. இதன் விளைவாகவே மனித வள வேலைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.
இன்றைய உலகில் "நிறுவனம் எனக்கு என்ன செய்ய முடியும் என்ற மனப்பான்மையுடன் கூடிய ஊழியர்கள் உள்ளார்கள். இப்போது நாங்கள் எங்கள் ஊழியர்களின் நலன்களை எங்கள் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்க முயற்சிக்கின்றோம்.
அதே நேரத்தில் எங்களை ஊழியர்களை திறன்கள் மற்றும் அது நம்மிடம் இருந்து என்ன விரும்புகிறது என்பதை நாம் கருதி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நீங்கள் ஒரு மனித வள மேலாண்மை குழுவின் ஒரு பகுதியாக மாறுவீர்கள் அல்லது ஒரு மனித வள மேலாண்மை குழுவை சமாளிக்க வேண்டும். இந்த தொழில் எவ்வாறு உருவானது என்பதை புரிந்து கொள்வது, அவர்களை என்ன செய்கிறார்கள்,எங்கிருந்து வருகிறார்கள் என்பதை பற்றி சிறந்த புரிதலை உங்களுக்கு வழங்கும் என்றும் உபவேந்தர் தெரிவித்தார்.;
இந்நிகழ்வில் மனித உரிமைகள் குறுங்கால பாடநெறியினை நிறைவுசெய்த 25 இளைஞர் யூவதிகளுக்கான சான்றிதழ்களை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் விசேட அதிதியாகவும், கௌரவ அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.எம். அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர், பாடநெறியின் இணைப்பாளர் விரிவுரையாளர் ரீ.எப்ஃ. சஜீதா, கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர், ஆகியோருடன் கலை கலாசார பீடத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment