பிரேஸிலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா...!


கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.:

இன்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில் 3:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரை இறுதிக்கு குரோஷியா தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எடியூகேசன் அரங்கில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.

அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தின்போது அணித்தலைவர் நேய்மார் கோல் புகுத்தினார்.



எனினும், 117 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் புரூனோ பெட்கோவிச் புகுத்திய கோல் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

இதனால் மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குரோஷியா 3:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் புகுத்திய கோல் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையை நெய்மார் சமப்படுதினார்.

பேலே 92 போட்களில் 77 கோல்களைப் புகுத்தினார். நெய்மார் 124 போட்டிகளில் 77 கோல்களை புகுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post