21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(29) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம் கோரி சுமார் 112 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
அதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக அல்லாத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயர் பெற்ற, சிறந்த மற்றும் நேர்மையான நபர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பொருத்தமான மூவரை தெரிவு செய்வது அல்லது விண்ணப்பங்களை அனுப்பாத, உரிய தகுதிகளை பூர்த்தி செய்தவர்கள் இருந்தால் பொருத்தமான மூவரை சிவில் சமூக பிரதிநிதிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று(29) பரிசீலிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment