பிரான்ஸில் இந்த வாரத்தின் நடுப்பகுதியில் இருந்து, குளிர்கால காலநிலை ஆரம்பமாகவுள்ளதாக பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கையுறைகள், தொப்பி, ஜெக்கெட் போன்ற குளிர்கால ஆடைகளை தயார்ப்படுத்துமாறும் அவற்றினை வெளியே எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை வரையில் இந்த காலநிலை மாற்றமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு, தென்மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பனியின் தாக்கம் முதலில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை நாடு முழுவதும், வெப்பநிலை முதலில் பருவகாலமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென வான்லை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல், வெப்பநிலை வீழச்சிடைந்து மிகவும் குளிர்ச்சியான காலநிலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 2 செல்சியஸ் பாகை வரை குறையும், இது வார இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று முதல் குளிர் மற்றும் வறண்ட காற்று காரணமாக காலை நேரங்களில் சமவெளிகளில் உறைபனிகளை அவதானிக்க முடியும். அதன் பின்னர் பனிப்பொழிவு ஏற்படும். பகல் நேரங்களில் 5 முதல் 8 செல்சியஸ் பாகை வரை வெப்பநிலை நிலவி மீளவும் இரவு நேரத்தில் மிகவும் குளிரான காலநிலையை மக்கள் எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் கடுமையான குளிரான மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஏனைய வருடங்களை விடவும் இந்த வருடம் மிகவும் குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அதற்கு ஏற்ற ஆடைகளை இன்று முதலே தயார்படுத்திக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment