வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது…!


சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்(CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.

வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் பணம் வழங்காமை தொடர்பில் ஐவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 15 – கஜீமா வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுநீரகங்களை பணத்திற்காக வழங்கும் நபர்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளும் தரப்பினர் ஆகியோருக்கு இடையில் சந்தேகநபர் தரகராக செயற்பட்டுள்ளதாகவும் தரகுப் பணத்திற்கு மேலதிகமாக சிறுநீரகத்திற்காக வழங்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை இன்று(06) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளைநம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post