கடும் குளிர் காலநிலையால் அமெரிக்காவும் கனடாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வெப்பநிலை மைனஸ் 55 டிகிரி செல்சியஸாக குறையும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த கிறிஸ்துமஸ் பல தசாப்தங்களில் மிகவும் குளிரான கிறிஸ்துமஸ் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, கிறிஸ்துமஸ் சீசனுக்கு திட்டமிடப்பட்ட பல விமானங்கள் ஏற்கனவே தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பரபரப்பான பறக்கும் பருவங்களில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். பல முக்கிய விமான நிலையங்கள் ஏற்கனவே தங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக கிறிஸ்மஸ் வார இறுதியானது அமெரிக்க மக்களுக்கு எதிர்பார்த்த வார இறுதியாக இருக்காது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆர்க்டிக் குளிர்கால புயல் காரணமாக அமெரிக்காவிற்கு கடுமையான குளிர்கால வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவில் வசிக்கும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கடுமையான குளிர் காலநிலை குறித்து எச்சரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment