கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.
நடப்புச் சம்பியனான பிரான்ஸ், இன்று நடைபெற்ற 16 அணிகளின் சுற்றில் போலந்து அணியை 3:1 கோல்கள் விகிதத்தில் வென்றது.
கத்தாரின் நகரிலுள்ள அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் 44 ஆவது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் ஒலிவியர் ஜிரூட் கோல் புகுத்தினார்.
இது சர்வதேச போட்டிகளில் ஜிரூட் புகுத்திய 52 ஆவது கோல் ஆகும்.
பிரெஞ்சு அணியின் முன்னாள் வீரர் தியரி ஹென்றி 123 சர்வதேச போட்டிகளில் 51 கோல்களைப் புகுத்தி, ஆகக்கூடுதலான சர்வதேச கோல்களைப் புகுத்திய பிரெஞ்சு வீரராக திகழ்ந்தார். அச்சாதனையை இன்று தனது 116 ஆவது போட்டியில் ஒலிவியர் ஜிரூட் முறியடித்தார்.
இப்போட்டியின் 74 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் கிலியன் எம்பாப்பே புகுத்திய கோல் மூலம் அவ்வணி 2:0 எனும் கோல்கள் நிலைக்கு முன்னேறியது.
90 நிமிட நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரம் முடிவடைந்து உபாதை ஈடு நேரத்தின் முதல் நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே தனது இரண்டாவது கோலைப்புகுத்தினார். இது இச்சுற்றுப்போட்டியில் கிலியன் எம்பாப்பே புகுத்திய 5 ஆவது கோல் ஆகும்.
உபாதை ஈடு நேரத்தின் 9 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி போலந்து வீரர் ரொபர்ட் லேவான்டோவ்ஸ்கி கோல் புகுத்தினார்.
இறுதியில் , பிரான்ஸ் அணி 3:1 விகித்தத்தில் போலந்தை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

Post a Comment