பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என மத்தியபிரதேச முன்னாள் மந்திரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட தூரத்துக்கு நடைப்பயணத்தை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை. அதேபோல் இந்திய நாட்டுக்காக இவ்வளவு தியாகங்களையும் நேருவின் குடும்பத்தை தவிர வேறு யாரும் செய்ததில்லை.
ஆட்சி அதிகாரத்துக்காக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. யாரை வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் வல்லமை கொண்ட மக்களின் நலனுக்காகவே அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment