நூருல் ஹுதா உமர்
முஸ்லிம்
பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) மற்றும் டயகோனியா Diakonia
நிறுவன அனுசரணையுடன் கல்முனை கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதானம்
மற்றும் விழுமிய கல்வி, தொடர்பாக மாணவர்களுக்கு மத்தியில் அடுத்த ஆண்டில்
சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும்
நோக்கில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் (TOT) பயிற்சிப்பட்டறை இன்று (28)
சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில் கல்முனை வலய
உதவிக் கல்விப் பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான
என்.எம். அப்துல் மலீக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்குப்
பிரதம அதிதியாகவும், வளவாளராகவும் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர்
எம்.எஸ். சஹூதுல் நஜீம் கலந்து கொண்டு ஆசிரியர்களைப் பயிற்றுவித்தார்.
இப்பயிற்சிப் பட்டறையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட
விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.அஸ்லம் சஜா, பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு
ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார். குறித்த பயிற்சி பட்டறையில்
கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப்பாளர் பீ. ஜிஹானா ஆலிவ்,
உதவிக் கல்விப்பணிப்பாளர் அஸ்மா மலீக் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து
கொண்டனர்.
பயிற்சியின்
இறுதியில் ஆசிரியர்கள் 2023ம் ஆண்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடைமுறைப்
படுத்தக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரையாடி தமது திட்டங்களை
முன்மொழிந்ததும் இப்பயிற்சியின் சிறப்பம்சமாகும்.
Post a Comment