அமெரிக்காவின் கொவிட் நிவாரண நிதியில் சுமார் 20 மில்லியன் டொலர்களை இணைய திருடர்கள் திருடியுள்ளனர் என்று அமெரிக்க இரகசிய சேவை தெரிவித்துள்ளது.
செங்டுவை தளமாகக் கொண்ட ஏ.பி.டி 41 என்ற குழுவினர் இம்மோசடியை மேற்கொண்டிருக்கலாம் என்று இரகசிய சேவையின் தேசிய பெருந்தொற்று மோசடி மீட்புக்கான ஒருங்கிணைப்பாளர் ரோய் டொட்சன் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் நன்மை பெறும் திட்டங்களை மோசடி செய்யும் உள்நாட்டு வெளிநாட்டு மோசடிக்காரர்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment