போராடிக் கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டு உள்ள சமந்தாவின் இந்த பதிவு வைரலாகிறது.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேல் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல இருக்கிறார் என்றும், நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கெல்லாம் விளக்கம் எதுவும் சொல்லாமல் இப்போது வரை வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். சமந்தா விரைவில் குணமடைய ரசிகர்களும், நடிகர், நடிகைகளும் வாழ்த்தி வருகிறார்கள். சமந்தாவின் உடல்நிலை குறித்து அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் வெளியிட்ட பதிவில், "எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக் கொண்டே இருப்பாய். இன்னும் இன்னும் போராடிக் கொண்டே இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு இரும்புப் பெண். உன்னை எதுவும் தோற்கடிக்காது. கஷ்டப்படுத்தாது.
மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், "நன்றி ராகுல். வெளியே யாராவது தங்கள் வாழ்க்கையோடு போராடுகிறார்களோ அவர்களுக்காக நான் இதை சொல்கிறேன். போராடிக் கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார். சமந்தாவின் இந்த பதிவு வைரலாகிறது.
Post a Comment