பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களுக்கும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு Abdulnaser bin Husien AL-Harthi அவர்களுக்கும் இடையான சிநேகபூர்வமான சந்திப்பு, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதரகத்தில் இன்று (14.12.2022) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் சவூதி அரேபியா - இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள், இரண்டு நாடுகளிலுமுள்ள மக்களின் சமகால சமூக, அரசியல் நிலைவரங்கள் என பரந்து பட்ட விடயப்பரப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பு அர்த்தபூர்வமான சந்திப்பாக அமைந்ததோடு, எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றக்கூடிய அமைவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. எதிர்காலத்தில் சவூதி அரேபியா அரசாங்கம் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகள் பற்றியும் அளவளாப்பட்டது.
தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை சவூதி அரேபிய அரசாங்கள் இலங்கைக்கு வழங்குமென தூதுவர், பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.
Post a Comment