அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் (Ricky Ponting) உடல்நலக்குறைவு காரணமாக பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பாண்டிங் வர்ணனையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பொண்டிங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அவரது உடல்நிலை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
47 வயதான அவர் வர்ணனை பெட்டியில் இருந்து வௌியேறி, அவரின் நெருங்கிய நண்பரும் முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கரின் உதவியுடன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானான ரிக்கி பொண்டிங் 168 டெஸ்ட் போட்டிகளிலும் 375 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர், வர்ணனையாளராக செயற்பட்டு வருகின்றார்.
Post a Comment