பாசுமதி தவிர்ந்த அரிசி வகைகளின் இறக்குமதி இடைநிறுத்தம்..!


பாசுமதி அரிசி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளின் இறக்குமதியை இடைநிறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட அரிசி மீது இந்த தீர்மானம் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக கப்பலில் ஏற்றப்பட்டுள்ள அரிசி தொகை நாட்டை வந்தடைவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது கட்டாயம் என ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, கடன் பத்திரம் விநியோகிக்கப்பட்ட மற்றும் முற்பணத் தொகை செலுத்தப்பட்ட அரிசி தொகைக்காகவும் அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் அரிசியை இறக்குமதி செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post