உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா செய்யவேண்டியவை குறித்து பார்க்கலாம்.,
இந்திய அணி வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.
இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் தொடர் உள்ளது. இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுக்கிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்திய அணியிப் வெற்றி சதவீதம், 68.06% ஆக உயரும் இதனால் இந்திய அணி மற்ற அணிகளின் முடிவுக்கு காத்திருக்காமல் எளிதாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம்.
அதே போல் இந்திய அணி தொடரை 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் வெற்றி சதவீதம் 62.50% ஆக உயரும் இதனால் இந்திய அணி மற்ற அணிகளின் முடிவுக்கு காத்திருக்காமல் எளிதாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம்.
அதேபோல் இந்திய அணி தொடரை 2-0 அல்லது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 60.65 ஆக உயரும் இதன் மூலமும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் இருக்காது.
ஆனால் மாறாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எந்த வித முடிவும் இல்லாமல் ( இரு அணிகளும் வெற்றி பெறாமலும் அல்லது தோல்வி அடையாமலும்) தொடர் 0-0, 1-1, 2-2 என்ற கணக்கில் டிரா ஆனால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 60 % க்கும் கீழ் வந்து விடும் . அவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு உட்பட்ட டெஸ்ட் தொடரின் முடிவுகளும் இந்திய அணிக்கு சாதகமாக வர வேண்டும்.
மாறாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தால் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் தங்களுக்கு வரவுள்ள டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். அவ்வாறு நடந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.
இந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-1 என்ற கணக்கில் இழந்தால் மட்டுமே பொருந்தும். 0-2,0-3,0-4 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.
உலக டெஸ்ட் சாம்ப்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு உள்ளதால் இந்திய அணி அதை பயன்படுத்திக் கொண்டு கடந்த முறை தவறவிட்ட உலக டெஸ்ட் சாம்ப்பியன்ஷிப்பை இந்த முறை கைப்பற்றலாம்.
Post a Comment