இன்று (18) நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என எல்பிட்டியவில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
கொத்து ரொட்டி போன்றே கோதுமை மாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மரக்கறி ரொட்டி, உருளை, பராட்டா போன்றவற்றின் விலையும் பத்து ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அசேல சம்பத் தெரிவித்தார்.
இந்த விலைக் குறைப்புடன் சேர்த்து கோதுமை மா பொருட்களின் விலைகளை உணவகங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 250 ரூபாவாக குறைத்ததன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.
Post a Comment