ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டிக்கு தெரிவு..

 

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. 

இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் குரேஷியா அணிகள் மோதிக் கொண்டன. 

போட்டின் ஆரம்பம் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். 

போட்டியின் 34 வது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். 

இதனையடுத்து போட்டியின் 39 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி வீரர் Julián Álvarez கோல் அடித்தார். 

அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 2 - 0 என ஆர்ஜன்டீனா முன்னிலை வகித்தது. 

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஆர்ஜன்டீனா அணி சார்பில் போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி வீரர் Julián Álvarez கோல் அடித்தார். 

இதற்கு பதிலடி கொடுக்க குரேஷியா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. 

அதனடிப்படையில் போட்டி முடிவில் 3 - 0 என ஆர்ஜன்டீனா அணி வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post