இயக்குனர் ஸ்ரீ வித்தகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் 'ரகட் பாய் காதல்'. இதில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நாடோடிகள் ,நிமிர்ந்து நில், போராளி, போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஸ்ரீ வித்தகன். இவர் இயக்கத்தில் மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ள இசை ஆல்பம் 'ரக்கர்ட் பாய் காதல்'.
இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள், நிமிர்ந்து நில்,போராளி, தரணி, அனுக்கிரகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக மூக்குத்தி அம்மன், வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன் போன்ற படங்களில் நடித்த ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார். டி.எம் உதயகுமார் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தை பிரியங்கா படியுள்ளார். மேலும், இதில் பின்னணி பாடி இருக்கும் பாடகர் ஜித்தின் ராஜ் பொன்னியின் செல்வன் மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.
ராஜா குருசாமி வரிகளில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு அருண்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரக்கர்ட் பாய் காதல்' இசை ஆல்பத்தை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ஆல்பம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
Post a Comment