Peru: அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மூலம் முறையற்ற இலாபம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெரு நாட்டு ஜனாதிபதி பெட்ரோ கெஸ்டில்லோ (Pedro Castillo) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலதிக 85 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பிற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பதாக அவர் அறிவித்திருந்தார். எனினும், அந்த அறிவிப்பை கருத்திற்கொள்ளாது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தோல்வியடைந்த ஜனாதிபதி பொலிஸ் பொறுப்பில் உள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பெட்ரோ கெஸ்டில்லோவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அரச ஒப்பந்தங்கள் மூலம் முறையற்ற விதத்தில் இலாபம் பெறும் குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பொன்றை நடத்திச் சென்றதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
Post a Comment