விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்..!



தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post