நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முட்டைகளுக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட விலையுடன் உடன்பட முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(15) அறிவித்தனர்.
நீதிபதிகளான பிரசன்ன டி சில்வா மற்றும் கேமா ஸ்வர்ணாதிபதி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயம் செய்ய நேற்று(14) நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
Post a Comment