கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் - ஒருவர் பலி..!

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச்சம்பவம் இன்று மதியம் 01.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையில் இருந்து திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் அக்கரைப்பற்றை சேர்ந்த சசி என தெரிய வந்துள்ளது.

இவர் இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் அக்கரைப்பற்று பொருப்பாளரும் ஆவார்.

Post a Comment

Previous Post Next Post