ஆரம்பப் பிரிவுக்கு தவணை பரீட்சை இல்லை - அடுத்த வருடம்


அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தவணை பரீட்சைகளுக்கு பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் நடத்தப்படும் கணிப்பீட்டு புள்ளிகளுக்கு அமைய புள்ளி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை பல்கலைக்கழங்களுக்கோ அல்லது திறமையின் அடிப்படையில் தொழிநுட்ப கல்லூரிகளுக்கோ உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post