அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை....!



வட்ஸ்அப் செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது.

அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீசா சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டு ஒரு தரப்பினர் மோசடியில் ஈடுபடுவதற்காக இவ்வாறு செயற்படுவதாகக் அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post