கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஹீரோவாகிய யாஷ், அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு தேச கட்சியின் (டிடிபி) உறுப்பினரும் ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினருமான நாரா லோகேஷை தாஜ் வெஸ்டின் ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
இருவரின் சந்திப்பு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, யாஷ் அரசியலுக்கு வருகிறார் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனினும், இதில் எந்த உண்மையும் இல்லையென்று யாஷின் நெருங்கிய வட்டாரங்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். இது ஒரு சாதாரண சந்திப்பு என்றும் அரசியலுக்கு சந்திப்புக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
கேஜிஎஃப் 2, 1,250 கோடியை வசூலைப் பெற்றதன் மூலம், யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Post a Comment