8வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை...

 

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்த பெண், முதல் தளத்தின் முன்புறம் உள்ள ன்கிரீட் தளத்தில் விழுந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post