மின்வெட்டு நேரம் 6 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படுமா ?


அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

நேற்று (05) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஷ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்  என  அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அமைச்சரவையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post